பதிவு செய்த நாள்
29
ஜன
2019
02:01
வெள்ளகோவில்:வெள்ளகோவில் வீரக்குமார சுவாமி கோவில் தேர்த்திருவிழா குறித்தான, ஆலோசனை கூட்டம், நேற்று (ஜன., 28ல்) நடந்தது.
மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வீரக்குமார சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா நடக்கிறது. இதையொட்டி, கோவில் குலத்தவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது .கூட்டத்தில் வரும், பிப்., 17ம் தேதி, காலை, 7:00 மணிக்கு தேர் முகூர்த்த கால் பூஜையும், 22ல், தேர் கலசம் வைப்பது, மார்ச், 5ல், தேர் நிலை பெயர்த்தலும், 6-ல் ரதோற்சவம், மாலை தேர்வடம் பிடித்தல், 7ம் தேதி தேர் நிலை சேர்தல், நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், முன்னாள் அறங்காவலர் கள், பிரியா ராமசாமி, சுந்தரவடிவேல், குணசேகர், குமரசாமி, நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம், வடுகபட்டி பூசாரி சண்முகம், செயல் அலுவலர் ரத்தினாம்பாள் மற்றும் கோவில் குலத்தவர்கள் பங்கேற்றனர்.