ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று (ஜன., 28ல்) திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
நிரந்தர உண்டியல்களில், 32 லட்சத்து, 22 ஆயிரத்து, 951 ரூபாய்; தட்டு காணிக்கை உண்டியல் களில், பத்து லட்சத்து, 14 ஆயிரத்து, 163 ரூபாய் இருந்தது. மேலும், 221 கிராம் தங்கம் மற்றும் 510 கிராம் வெள்ளி இருந்தது. இதில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.