பதிவு செய்த நாள்
30
ஜன
2019
03:01
அவிநாசி:ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனாருடன், சிவபெருமான் வேடுபறி திருவிளையாடல் நடத்திய, திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி தேர்த்திருவிழா, பிப்., 19, 20ல் நடக்கிறது. கொங்குவள நாட்டில், நல்லாற்றங்கரையில், மேற்கு நோக்கியபடி அருள்பாலித்து கொண்டிருக்கும், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கோவிலில் தேர்த்திருவிழா, மகா உற்சவ விழா, வரும் பிப்., 13ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பிப்., 14ல் சூரிய சந்திர மண்டல காட்சி, 16ல் பூதவாகன சிம்ம வாகன காட்சி, 16ல் புஷ்ப விமான காட்சி, 17ல் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சி; பிப்., 18ல் திருக்கல்யாண உற்சவ விழா நடக்கிறது. முயங்கு பூண்முலை வல்லியம்மை உடனமர் திருமுருகநாத சுவாமி, வள்ளி, தெய்வானை சமேத சண்முகநாதர் திருக்கல்யாண உற்சவ விழா விமரிசை யாக நடக்க உள்ளது.அன்று மாலை, யானை வாகன காட்சியும், அன்னவாகன காட்சிகளும் நடக்கின்றன.
வரும், 19ம் தேதி திருமுருகநாதர், ஸ்ரீ சண்முகநாதர் உட்பட உற்சவமூர்த்திகள், திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். அன்றைய தினம், மாலை, 3:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், 20ம் தேதி தேர் நிலையை வந்தடைகிறது. வரும், 21ல், பரிவேட்டை, குதிரை மற்றும் சிம்ம வாகன காட்சிகள், தெப்பத்தேர் உற்சவ விழா நடக்கிறது.பிப்., 23ம் தேதி, திருமுருகன்பூண்டி யில் நடந்தேறிய, ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும், மறுநாள் பிரம்ம தாண்டவ தரிசன காட்சியும், விமரிசையாக நடைபெற உள்ளது. மஞ்சள் நீராட்டு விழா, மயில்வாகன காட்சியுடன், தேர்த்திருவிழா, 24ம் தேதி நிறைவு பெறுகிறது.