பதிவு செய்த நாள்
27
பிப்
2012
10:02
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில்நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, மற்றகால பூஜைகள் நடந்தன. அதிகாலை 5.37மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க குமார் பட்டர், கொடிமரத்தில் கொடியேற்றினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு பால்,விபூதி,சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலைகள், தர்பைப்புல்லால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து, கொடிமரத்திற்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12 நாள் திருவிழாவில், தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை,வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10ம் நாளான மார்ச் 6ம்தேதி நடக்கிறது.