கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் தேரோட்டம் நடந்தது. கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் சுவாமி சேவல், ஆட்டுகிடா, அன்னம், காளை, பூத, சிங்க வாகனங்களில் சுவாமி உலா நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரை் ஆயிரக்கணக்கனோர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் நேர்த்தி கடனாக தேரின் சக்கரத்தில் தேங்காய் உடைத்தல், அங்கபிரதட்சணம், காவடி எடுத்தல் ஆகியன நடந்தது. மலைக்கிராமத்தினர் மட்டுமல்லாது வெளி மாவட்டத்தினரும் கலந்து கொண்டனர்.