பதிவு செய்த நாள்
01
பிப்
2019
01:02
ஆத்தூர்: ஆத்தூர், பைத்தூர் சாலையில், எல்.ஆர்.சி., நியூகாந்தி நகரில், பத்மஸ்ரீசாய்ராம் பாபா கோவில் கட்டப்பட்டு, கடந்த அக்., 21ல், கும்பாபிஷேகம்ம் நடந்தது. அதன், 100ம் நாளையொட்டி,
சாய்ராம் பாபாவுக்கு, நேற்று (ஜன., 31ல்) அபிஷேக பூஜை நடந்தது. அப்போது, மலர் அலங் காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள், காய்ந்த தேங்காயை அணையா தீயில் போட்டனர். அந்த தீயின் ஒளியில், பாபா உருவம் நிழல் போன்று தெரிந்ததாக, பக்தர்கள் பரவசமடைந்தனர். இத்தகவல் வேகமாக பரவியதால், ஏராளமானோர், கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.