பதிவு செய்த நாள்
02
பிப்
2019
06:02
தும்பைப்பட்டி, சிவாலயபுரம் அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமி, அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மன், அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணனர் கோவிலில் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த, தை மாத சனி மஹா பிரதோஷ வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், கரும்பு சாறு, சந்தனப்பொடி, திருநீர், மற்றும் ஸ்வர்ணம் அபிக்ஷேகம் நடைபெற்றது. விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணனர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.