பதிவு செய்த நாள்
03
பிப்
2019
04:02
திருவொற்றியூர்: சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.ஆதிபுரீஸ்வர் மண்டத்தில், கொடிமரம் அருகே வீற்றிருக்கும் நந்தி, உற்சவரான தியாகராஜர், ஆகாச லிங்கம், அண்ணாமலையார், திருவொற்றீஸ்வரர் மூலவர் சிலைகளுக்கு, தண்ணீர், பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் நடைபெற்றது.பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில், சகஸ்ரலிங்க அபிஷேகம் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்கூட்டியே வரிசை கட்டி, அமர்ந்திருந்தனர்.பின், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பிரதோஷ நாயகர், நந்தியில் எழுந்தருளி, உள் பிரகாரத்தை சுற்றிவந்தார்.ஏராளமான பக்தர்கள், உடன் வலம் வந்தனர்.