மகா பிரத்யங்கரா அஷ்ட பைரவர் யாகம்
பதிவு செய்த நாள்
03
பிப் 2019 04:02
சென்னை: மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தில், அஷ்ட பைரவர், மகா பிரத்யங்கரா யாகம், நாளை நடக்க உள்ளது. மக்கள் நலனுக்காக, தை அமாவாசையான நாளை இரவு, மேற்கு மாம்பலத்தில் உள்ள, அயோத்யா மண்டபத்தில், பிரத்யங்கரா தேவி, அஷ்ட பைரவர் மகா யாகம், மாலை, 6:00 மணிக்கு நடத்தப்படுகிறது.நாராயண அய்யர் நினைவு அறக்கட்டளை, அருளமுதம் வேத வித்யா குருகுலம் ஆகியவை இணைந்து, ஜோதிடர் பார்த்தசாரதி தலைமையில், ரமணி குருஜி, குமார் குருஜி ஆகியோர், மகா யாகத்தை நடத்துகின்றனர். நாளை மாலை, 4:00 மணிக்கு, மகா கணபதி பூஜையுடன் துவங்கும் யாகத்தில், மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், பைரவர், பிரத்யங்கரா யந்திர, ஆயுத ஆவாஹனம் நடக்க உள்ளன.மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை ஜபம், பொது சங்கல்பம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, எக்காளம், சங்கு, உடுக்கை உள்ளிட்ட, பல கைலாய வாத்தியங்கள் முழங்க, யந்திரம் மற்றும் ஆயுதங்களுக்கு சிறப்பு ஆரத்தி, பூஜை நடக்கிறது.பின், மிளகாய் வற்றல், விசேஷ திரவியங்கள், ஆறு வகையான சமித்துக்கள், அன்னங்கள், பழங்கள், புஷ்பங்கள் உள்ளிட்டவையால் ஹோமம், வஸோதாரா ஹோமம், மகா பூர்ணாஹுதி, பிரத்யங்கரா, பைரவர் அபிஷேகங்கள் நடக்க உள்ளன.இரவு, 10:30 மணி முதல் சிறப்பு பூஜை, உபச்சாரம், சதுர்வேத பாராயணம், ஆசீர்வாதம், மங்கள ஆரத்தி ஆகியவை நடக்கின்றன. சிருங்கேரி கஜாநன கனபாடிகள், வடபழனி ஸ்ரீனிவாச சிவாச்சாரியர் ஆகியோர், ஹோமங்களை நடத்துகின்றனர். பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம்.விபரங்களுக்கு, 94442 56421, 98401 49913 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
|