திருப்புத்துார்: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய கோயில்களில் ஒன்றாகவும், ஆழ்வார் ஆச்சார்ய மக்களால் பாடல் பெற்று சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. இந்த கோயிலிலுக்கு பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர். சித்திரை திருவிழா, ஆடித்திருவிழா, வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்ப உற்ஸவம் சிறப்பாக நடக்கும்.இந்த ஆண்டு மாசி திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய திருவிழாவான தெப்பம் வரும் 19ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடக்கிறது.வரும் 9 ம்தேதி மாலை 6;00 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடு, 10ம் தேதி காலை 7:20 மணிக்கு கல்யாண மண்டபம் எழுந்தருளல், வீதியுலா நடக்கிறது. 18 ம்தேதி தெப்பம் முட்டுதள்ளுதல் நிகழ்ச்சியும், 19ம் தேதி இரவு 10:00 மணிக்கு தெப்பம் கண்டருளலும், 20 ம்தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சேவற்கொடியான்,தேவஸ்தான மேலாளர் இளங்கோ செய்து வருகின்றனர்.