Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
தர்ப்பணம் செய்ய அமாவாசை சிறந்தது ஏன்? தர்ப்பணம் செய்ய அமாவாசை சிறந்தது ... எந்த மாதத்தில் சுபகாரியங்கள் செய்ய கூடாது? எந்த மாதத்தில் சுபகாரியங்கள் செய்ய ...
முதல் பக்கம் » துளிகள்
சந்திராஷ்டமம் என்பது என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
13:06

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால் அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் + அஷ்டமம் =  சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நக்ஷத்திரத்திற்கு 17வது நக்ஷத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள்.

மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும். சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள்.  ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும். சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும்.

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது. அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்.

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.
இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு.
பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.
மூன்றாம் இடத்தில் இருக்கும்போது சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள் ஏற்படும்.
நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு கிடைக்கும்.
ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன் ஆதரவு உண்டாகும்.
ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள் ஏற்படும்.
ஏழாம் இடத்தில் இருக்கும்போது காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி ஏற்படும்.
எட்டாம் இடத்தில் இருக்கும்போது.. இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம்.
இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம்.  உள்ளூர் கோயிலுக்குச் சென்று வரலாம்.
ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம் கிடைக்கும்.
பத்தாம் இடத்தில் இருக்கும்போது.. பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள் ஏற்படும்.
பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது..தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை... ஏற்படும்.!
பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது..வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள் உண்டாகும்.!

நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும்.

பிறந்த நட்சத்திரம் - சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி-அனுஷம்
பரணி-கேட்டை
காா்த்திகை- மூலம்
ரோகிணி-பூராடம்
மிருகசீரிஷம்-உத்ராடம்
திருவாதிரை-திருவோணம்
புனா்பூசம் -அவிட்டம்
பூசம் -சதயம்
ஆயில்யம் -பூரட்டாதி
மகம் -உத்ரட்டாதி
பூரம் - ரேவதி
உத்திரம் -அஸ்வினி
ஹஸ்தம் -பரணி
சித்திரை -காா்த்திகை
ஸ்வாதி - ரோகிணி
விசாகம் -மிருகசீரிஷம்
அனுஷம் -திருவாதிரை
கேட்டை -புனா்பூசம்
மூலம் - பூசம்
பூராடம் -ஆயில்யம்
உத்ராடம் - மகம்
திருவோணம் -பூரம்
அவிட்டம் - உத்திரம்
சதயம் -ஹஸ்தம்
பூரட்டாதி -சித்திரை
உத்ரட்டாதி -ஸ்வாதி
ரேவதி - விசாகம்.

 
மேலும் துளிகள் »
temple
சோப் தயாரிக்க எண்ணெய் தேவை. எண்ணெய் பட்ட இடத்தை சுத்தம் செய்ய சோப் தேவை. வாழ்வின் முரண்பாடு இது ... மேலும்
 
temple
ராவண வதத்திற்காக நிகழ்ந்தது ராமாவதாரம் என்பர். ஆனால், உண்மையில் ராமர் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள் ... மேலும்
 
temple

தம்பி ’கேவட்’ ஏப்ரல் 15,2019

அயோத்தியில் இருந்து காட்டுக்கு புறப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் கங்கை கரையை அடைந்தனர். ... மேலும்
 
ஒருவர் வேலை செய்யும் போது, அவருக்கு உதவி செய்பவர்கள் தங்களின் பங்களிப்பை, ’ராமருக்கு அணில் உதவியது ... மேலும்
 
temple
காட்டில் நடத்தவிருந்த யாகத்துக்கு இடையூறு செய்யும் அசுரர்களை அடக்க விரும்பினார் ராஜரிஷி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.