பதிவு செய்த நாள்
27
பிப்
2012
11:02
ஓசூர்: ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில் மலைமீது சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஆரூத்ரா தரிசனம், பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேர்த்திருவிழாவை காண வருகின்றனர். நடப்பாண்து இந்த கோவில் தேர்த்திருவிழா வரும் 1ம் தேதி துவங்கி 15 நாள் நடக்கிறது. 8ம் தேதி திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. கலெக்டர் மகேஷ்வரன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் முனுசாமி தேரை வடம்பிடித்து இழுத்து வைக்கிறார். எம்.பி., சுகவனம், எம்.எல்.ஏ., கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஏ.மனோகரன், நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, ஒன்றிய சேர்மன் புஷ்பா சர்வேஸ், முன்னாள் நகராட்சி தலைவர்(பொ)மாதேஸ்வரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வரதராஜன், கவுன்சிலர்கள் நாகராஜ், ரோஜா பாண்டியன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தேர்த்திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஸ்வாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள், வாகன உற்சவம், பல்லக்கு ஊர்வலம், அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவிர் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களும், உள்ளூர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.