Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ராகுவால் இனி ராஜயோகம் தான்! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி,  விசாகம் 1,2,3) தெய்வ அருளால் எதிர்பார்ப்பு நிறைவேறும் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) காலம் மாறலாம் நம் கடமை மாறுமா
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
16:59

ராகு 10ம் இடமான மிதுனராசிக்கு மாறுவது சிறப்பான இடம் அல்ல. பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுப்பார். கேது 4ம் இடமான தனுசு ராசிக்கு வருவதால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். குருபகவானால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் அவரது பார்வையால் நன்மை காண்பீர்கள். சனிபகவானால்  ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.   காலத்தால் கிரகங்கள் இடம் மாறினாலும் நீங்கள் கடமை தவறாமல் அக்கறையுடன் பணியாற்றி உயர்வீர்கள்.

2019 பிப்ரவரி– அக்டோபர்

குடும்பத்தில் சீரான வசதி வாய்ப்பு  இருக்கும். தம்பதியிடையே அன்பு நீடிக்கும். சுபநிகழ்ச்சிகள் தடைபடலாம். கவுரவத்திற்கு பாதிப்பு உண்டாகாது. அனாவசிய செலவைத் தவிர்ப்பது நல்லது. குருவின் வக்கிர காலத்தில் அவரின் பார்வையால் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.


பணியாளர்களுக்கு கடந்த காலத்தை விட பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபார முயற்சி தற்போது வேண்டாம்.


கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் விடாமுயற்சியால் கையெழுத்தாகும். எதிர்பார்த்த விருது, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.


மாணவர்கள் விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். குருவின் வக்கிர காலத்தில் அவரின் பார்வையால்  போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.


விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். சிலருக்கு பாதகமான தீர்ப்பும் கிடைக்கலாம். குடும்பத்தேவைக்காக அதிகம் பாடுபட வேண்டியதிருக்கும்.  குருவின் வக்கிர காலத்தில் தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. கேதுவால் உடல் உபாதைகள் வரலாம்.

2019 நவம்பர் – ஆகஸ்ட்

சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். 2020 மார்ச் 26க்கு பிறகு குருபகவான் பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் தடைபடலாம்.  உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.  2020 மார்ச் 26க்கு பிறகு குருபகவானால் நிலைமை சீராகும். வாழ்வில் குதூகலத்தை கொடுப்பார்.  புதுமணத் தம்பதியருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும்.


தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு  வேலைப்பளு அதிகமாகும். இருப்பினும்  சம்பள உயர்வுக்கு  தடை இருக்காது. அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். 2020 மார்ச் 26க்கு பிறகு வேலையில்  திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள்.

வியாபாரத்தில் பின்தங்கிய நிலை ஏற்படாது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தொழில்ரீதியாக  பயணம் ஏற்படலாம். பெண்களால் பண இழப்பைச் சந்திக்கலாம் கவனம்.


கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். முயற்சியில் தடை, பணநஷ்டம் ஏற்படலாம்.


அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.


மாணவர்களுக்கு குரு சாதகமற்று இருப்பதால் ஆசிரியர்கள், பெற்றோர் ஆலோசனை கேட்பது நல்லது. 2020 மார்ச்  26க்கு பிறகு  கல்வியில் சிறப்படைவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.


விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடைவகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது.


பெண்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவை. 2020 மார்ச் 26க்கு பிறகு சுபிட்சம் நிலவும்.


பரிகாரம்:
* வெள்ளியன்று ராகுகால துர்கை வழிபாடு
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
* திங்கட்கிழமை சிவபெருமானுக்கு நெய்தீபம்

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்
 
temple
ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.