Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) நல்ல காலம் நெருங்குது சுபயோகமே வாழ்விலே கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) காலம் மாறலாம் நம் கடமை மாறுமா கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ராகுவால் இனி ராஜயோகம் தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
16:58

ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் நன்மை கிடைக்கும். ராகுவால் இனி ராஜயோகம் தான். கேது 5ம் இடமான தனுசு ராசிக்கு மாறுவதால் அரசு வகையில்  பிரச்னை ஏற்படலாம். எதிரி தொல்லை வரலாம். குரு உறவினர் வகையில் வீண்பகையை உருவாக்குவார். ஆனால் அவர் மார்ச் 13 முதல் மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கும் போது  குடும்ப வாழ்வு குதூகலம் அளிக்கும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.  குரு 2020 மார்ச் 26ல் மகர ராசிக்கு மாறியபின் மனதில் தளர்ச்சி உண்டாகும். சனிபகவானால் திருப்தியற்ற நிலை இருந்தாலும் அவரது 7ம் பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும்.

2019 பிப்ரவரி– அக்டோபர்

ராகு பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் நன்மை கிடைக்கும்.  குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு.


பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். சிலர் இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். அதுவும் விரும்பிய இடமாக அமையும். கடந்த காலத்தில் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப்பெறுவர்.

வியாபாரிகளுக்கு கடந்த காலத்தில் இருந்த தடைகள் அகலும்.  பெண்களின் உதவியால் வளர்ச்சி காண்பீர்கள். சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்கலாம்.


கலைஞர்கள் ஆடம்பர வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வாழ்வில் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும்.


மாணவர்கள்  இந்த கல்வி ஆண்டில் நல்ல வளர்ச்சி காணலாம். தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.


விவசாயிகள் நல்ல வளத்தைக் காணலாம். மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.  புதிய சொத்து வாங்கலாம்.


பெண்களுக்கு குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.  பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.


2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
முயற்சியில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். எடுத்த முயற்சி வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. பொருளாதார வளம் சிறக்கும்.  குருபகவான் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.  சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணியிடத்தில் திறமை பளிச்சிடும்.  2020 மார்ச் 26க்கு பிறகு அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.  

வியாபாரத்தில்  நல்ல முன்னேற்றம் உண்டாகும்.  2020 மார்ச் 26க்கு பிறகு  வீண் செலவு ஏற்படலாம். குருவின் 9ம் இடத்து பார்வையால்  பகைவர் சதி உங்களிடம் எடுபடாது.


கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயர் காண்பர்.  சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.


மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.  2020 மார்ச் 26க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.


விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். கீரை வகைகள், காய்கறிகள், மஞ்சள், நெல், கோதுமை போன்றவை மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.


பெண்களுக்கு சுபவிஷய பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும்.   பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர்.  2020 மார்ச் 26க்கு பிறகு  முயற்சியில் தடை குறுக்கிடலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியில் கூடுதல் அக்கறை தேவை. உடல்நிலை சிறப்பாக இருக்கும்.


பரிகாரம்:
* சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்
 
temple
ராகு 10ம் இடமான மிதுனராசிக்கு மாறுவது சிறப்பான இடம் அல்ல. பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.