Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி,  விசாகம் 1,2,3) தெய்வ அருளால் எதிர்பார்ப்பு நிறைவேறும் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு : (மூலம், பூராடம், உத்திராடம் –1) செலவானால் ஆகட்டும் அது சுபச்செலவு தானே! தனுசு : (மூலம், பூராடம், உத்திராடம் –1) ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
விருச்சிகம்: விசாகம் 4, அனுஷம், கேட்டை) குறையெல்லாம் தீரும் குருவின் பார்வையாலே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
17:08

ராகு 8ம் இடமான மிதுனராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. உறவினரால் பிரச்னை உருவாகலாம். முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். கேது 2ம் இடமான தனுசு ராசிக்கு செல்வது சிறப்பான இடம் அல்ல.அரசு வகையில் அனுகூலம் இருக்காது. குருவால் மந்தநிலை குறுக்கிட்டாலும் அவரது பார்வை பலத்தால் குறையெல்லாம் படிப்படியாக நீங்கும். அவர் மார்ச்13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 26க்கு பிறகு குருவால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால்  அவரது பார்வை பலத்தால் நன்மையடைவீர்கள். சனி குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்துவார். பொருளாதார இழப்பும் ஏற்படும்.

2019 பிப்ரவரி– அக்டோபர்
ராகுவால்  தடைகள் குறுக்கிட்டாலும் குருவால் பிரச்னை சரிசெய்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குருபகவான்  மே 19 முதல் அக். 26 வரை  வக்கிரம் அடைவதால் நன்மை குறையும்.  வீண் விரயம், அலைச்சல் ஏற்படும்.  கணவர், மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கவும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். குருவின் பார்வையால் பெண்களால் மேன்மை கிடைக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.

தனியார்துறை பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குருவின் வக்கிர காலத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். மார்ச் 13ல் இருந்து மே19 வரை சகஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.


வியாபாரத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. அரசு வகையில் சோதனைக்கு ஆளாகலாம்.  குருபார்வை பலத்தால் பிரச்னையின் தீவிரம் குறையும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.


கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.


மாணவர்கள் சோம்பலால் பின்தங்கிய நிலைக்கு ஆளாகலாம்.  இருப்பினும் குருபார்வையால் நன்மை கிடைக்கும்.


விவசாயிகள் அதிகமாக உழைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.


பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர் உதவுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.  மே 19 முதல் அக்.26 வரை  எதிலும் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவை. சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.  

2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்

எந்த ஒரு முக்கிய விஷயத்தையும் தீர சிந்தித்த பின்னரே தொடங்க வேண்டும் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.


பணியாளர்களுக்கு குருவால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். 2020 மார்ச் 26க்கு பிறகு வெளியூரில் தங்க நேரிடும். வியாபாரத்தில் பணவிரயம் ஏற்பட்டாலும் அதற்கேற்ப வருமானமும் இருக்கும். பகைவரால் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். 2020 மார்ச்26க்கு பிறகு அதிக முதலீடு செய்யவதை தவிர்க்கவும்.


கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். 2020 மார்ச்26க்கு பிறகு சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.


அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலன் காண்பர்.


மாணவர்களுக்கு மந்தநிலை மறையும். குருவால் மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். 2020 மார்ச்26க்கு பிறகு சற்று கவனம் தேவை.


விவசாயிகள் சீரான பலன் பெறுவர். விளைச்சல் சுமாராக இருந்தாலும் உழைப்புக்கு தகுந்த வருமானம் வரும்.


பெண்கள் குடும்பவாழ்வில் நிம்மதி பெறுவர் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். 2020 மார்ச் 26க்கு பிறகு குருபார்வையால் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்:
* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் பூஜை
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
* சனியன்று பெருமாளுக்கு துளசி மாலை

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்
 
temple
ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.