Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: விசாகம் 4, அனுஷம், கேட்டை) குறையெல்லாம் தீரும் குருவின் பார்வையாலே விருச்சிகம்: விசாகம் 4, அனுஷம், கேட்டை) ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அள்ளித்தரப் போகிறார் ஆறாமிடத்தில் ராகு மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
தனுசு : (மூலம், பூராடம், உத்திராடம் –1) செலவானால் ஆகட்டும் அது சுபச்செலவு தானே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
17:10

ராகு 7ம் இடமான மிதுனராசிக்கு மாறியுள்ளார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் இடப்பெயர்ச்சி, தரம் தாழ்ந்தவர் சேர்க்கையால் அவப்பெயரை சந்திக்க நேரலாம். கேது இப்போது உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடமல்ல. அவரால் காரிய தடை, உடல் உபாதை ஏற்பட வாய்ப்புண்டு.

குருபகவான் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். அவரால் கலகம், விரோதம், மந்த நிலை ஏற்படும். ஆனால் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. 2020 மார்ச் 26ல் 2ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார் இதன் பின் நன்மை அதிகரிக்கும். சனிபகவான் ஜென்ம ராசியில் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

2019 பிப்ரவரி – அக்டோபர்
கடந்த காலத்தில் இருந்த பணஇழப்பு, மனக்குழப்பம் முதலியன மறையும். வேலை விஷயமாக குடும்பத்தை  பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். பணம் அதிகம் செலவானாலும் சுபச்செலவாக அமையும்.

கணவன், மனைவிக்குள் கருத்துவேறுபாடு உருவாகி மறையும். குருபகவான் மே19 முதல் அக்.26 வரை வக்கிரம் அடைந்து விருச்சிக ராசியில் இருக்கிறார். அப்போது எந்த ஒரு செயலையும் தீர சிந்தித்த பிறகே அதில் ஈடுபட வேண்டும்.

பணியாளர்கள் சுதந்திரமற்ற நிலையில் இருப்பர்.  வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம் கவனம். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள்,அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.  

மாணவர்கள் சிரத்தையுடன் படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். மார்ச்13க்கு பிறகு குருவின் பார்வையால் இடர்ப்பாடுகள் மறையும். போட்டிகளிலும் வெற்றி காணலாம்.

விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். இருப்பினும் மார்ச் 13க்கு பிறகு குருபார்வையால் வருமானம் அதிகரிக்கும். நிலப்பிரச்னையில் தீர்வு சாதகமாகும்.  

பெண்கள் குடும்பத்தில் முக்கியத்துவம் பெறுவர். சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த ஆதாயம் அடைவர். மே 19 முதல் அக்.26 வரை  ஆடம்பரச் செலவை குறைப்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.

2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலக்கட்டம். செயலில் தடைகள் குறுக்கிடலாம். விடாமுயற்சியால்  முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். 2020 மார்ச் 26க்கு பிறகு வசதி வாய்ப்பு பெருகும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

பணியாளர்களுக்கு வேலைப் பளுவும், அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.  சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். அரசுப்பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.

வியாபாரிகள் இருப்பதை சிறப்பாக நடத்துவது சிறப்பு. செலவில் சிக்கனம் தேவை. வாடிக்கையாளரை  தக்க வைக்கும் முயற்சி அவசியம்.  2020 மார்ச்  26க்கு பிறகு குருவின் பலத்தால் அதிக லாபம் கிடைக்கப் பெறலாம். 

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை கேட்டு பெறுவது நல்லது. 2020 மார்ச் 26க்கு பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள். முக்கிய வேலையை நேரடி பார்வையில் நடத்துவது நல்லது.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.  2020 மார்ச் 26க்கு பிறகு சுபவிஷயங்கள் கைகூடி வரும். கணவரின் அன்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

பரிகாரம்:
* செவ்வாயில் முருகனுக்கு பாலபிஷேகம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* சுவாதியன்று லட்சுமிநரசிம்மர் தரிசனம்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்
 
temple
ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.