Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

தனுசு : (மூலம், பூராடம், உத்திராடம் –1) செலவானால் ஆகட்டும் அது சுபச்செலவு தானே! தனுசு : (மூலம், பூராடம், உத்திராடம் –1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) கேதுவால் சேர்ந்திடும் பொன்னும் பொருளும் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அள்ளித்தரப் போகிறார் ஆறாமிடத்தில் ராகு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
17:13

ராகு இப்போது 6ம் இடமான மிதுன ராசிக்கு வந்துள்ளார். எதிரிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். ஆறாமிடத்தில் ராகு நற்பலனை வாரி வழங்குவார்.


கேது ராசிக்கு 12ம் இடமான தனுசு ராசிக்கு செல்வதால் பணவிரயம் ஏற்படலாம். குருபகவான் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரமாக குரு தனுசு ராசிக்கு வருவதால் வீண் அலைச்சல் ஏற்படும். அவர் 2020 மார்ச் 26ல் உங்கள் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் பிரச்னை வரலாம். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்புண்டு. 12ம் இடத்தில் இருக்கும் சனிபகவானால்  பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும்.


2019 பிப்ரவரி – அக்டோபர்
ராகுவால் பணப்புழக்கம்  சிறப்பாக இருக்கும்.  தடையனைத்தும் விலகும். மனதில் மகிழ்ச்சி  நிலைக்கும். வாகன யோகம் உண்டாகும். வாழ்வில் சந்தோஷ அனுபவம் பெறுவீர்கள்.  நினைத்தது நிறைவேறும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். மார்ச்13 ல் இருந்து மே19 வரை குருவால் வீண் அலைச்சல் ஏற்படும்.  மே19 முதல் அக்.26 வரை சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.  கணவன், மனைவி இடையே இணக்கமான சூழல் உருவாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி நிலை காண்பர்.  சிலர் வேலைப்பளுவுக்கு ஆளாகலாம்.  குருபகவானின்  வக்கிர காலத்தில் சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.  பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும்.


வியாபாரிகளுக்கு புதிய வழியில் வருமானம் வரும். தொழில் விஷயமாக ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகாது.


கலைஞர்கள் திருப்திகரமான பலனைக் காண்பர். வருமானத்திற்கு  குறைவிருக்காது. குருவின் வக்கிர காலத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.


அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.  பணவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.


மாணவர்கள்  ஆசிரியர்களின் அறிவுரை கேட்டு முன்னேறுவர். வளர்ச்சிக்கான காலம் ஆரம்பமாகி விட்டது. மே 19 முதல் அக்.26 வரை வகுப்பில் முதன்மை வகிப்பர். தேர்வில் உயர் மதிப்பெண், போட்டிகளில் வெற்றியை எதிர்பார்க்கலாம். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு பெறுவர்.


விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் அதிக வருமானம் காண்பர். சொத்து வாங்கும் சூழல் அமையும்.புதிய இயந்திரங்கள் வாங்குவர். நிலப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  


பெண்கள் சீரான வளர்ச்சி காண்பர். மார்ச் 13க்கு பிறகு குரு சாதகமற்று இருப்பதால் குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போகவும். குருபார்வையால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மே 19 முதல் அக்.26 வரை வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

2019 நவம்பர்– 2020 ஆகஸ்ட்

முக்கிய கிரகங்களில் ராகு மட்டும் நன்மை தரும் நிலையில் உள்ளார்.  குருவால் பணவிரயம், மனவருத்தம், வீண்அலைச்சல் ஏற்படலாம். சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை வரலாம். 2020 மார்ச்26க்கு பிறகு குழப்பம் நிலவும். அப்போது  குருபகவானின் பார்வையால் குதூகலத்தைக் கொடுப்பார். சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.


பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். 2020 மார்ச் 26க்கு பிறகு வேலையில் பொறுமை தேவைப்படும்.


வியாபாரிகளுக்கு எதிரிதொல்லை குறுக்கிடலாம்.  ஆனாலும் வருமானம் குறையாது. 2020 மார்ச் 26க்கு பிறகு குருபார்வையால் பின்னடைவு மறையும். கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர்.


அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர்  பெறுவர். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நன்மையளிக்கும். 2020 மார்ச் 26க்கு பிறகு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.


விவசாயிகளுக்கு கீரை, காய்கறிகள், கிழங்கு வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.


பெண்களுக்கு சகோதரவழியில் பணஉதவி கிடைக்கும். 2020 மார்ச் 26க்கு பிறகு குருவின் பார்வையால் தடைபட்ட திருமணம் நடந்தேறும். தம்பதியிடையே ஒற்றுமை பலப்படும்.உடல்நிலை திருப்தியளிக்கும்.


பரிகாரம்:
* கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை
* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்
 
temple
ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.