போடி: தை அமாவாசையை முன்னிட்டு போடி அருகே பிச்சாங்கரையில் பழமையான கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அலங்காரத்தை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த அறங்காவலர் பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் மற்றும் திருப்பணி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லையசுவாமி கோயில்,போடி சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நேற்று அதிகாலையில் வேலப்பருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கிடாவெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். . ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜதானி போலீசார் செய்தனர்.