பதிவு செய்த நாள்
05
பிப்
2019
03:02
மயிலம்: திருவக்கரையில் வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை ஜோதி தரிசனம் நடந்தது.
அதனையொட்டி நேற்று (பிப்., 4ல்) காலை 6:00 மணிக்கு விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்ரகாளியம்மன், வக்ர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு வக்ரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* அமாவாசை வழிபாடு: மயிலம் பகுதி கோவில்களில் தை அமாவாசை வழிபாடு நடந்தது. மயிலம் அடுத்த மோழியனூர் அக்கர காளியம்மன் கோவிலில் நேற்று (பிப்., 4ல்) தை அமாவாசையையொட்டி, நேற்று (பிப்., 4ல்) காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா தீபாரதனையும்; மாலை 6:00 மணிக்கு கூட்டு வழிபாடும் நடந்தது.இரவு 7:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போன்று, தென்பசியார் பெரிய பாளையத்தம்மனுக்கும், கூட்டேரிப்பட்டு, கொல்லியங்குணம், காளியம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.