தியாகதுருகம் சித்தலூர் அம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2019 03:02
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.தியாகதுருகம் அடுத்த சித்தலூர் மணிமுக்தா ஆற்றின் கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து தங்ககாப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனுக்கு படையலிட்டு வணங்கினர்.இரவு உற்சவர் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சம் நடந்தது. தாலாட்டு பாடி சிறப்பு வழிபாடு நடந்தது.