கிருஷ்ணராயபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2019 03:02
கிருஷ்ணராயபுரம்: தை அமாவாசை முன்னிட்டு, மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூரில், காவிரி ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற மதுகரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தை அமாவாசை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நேற்று (பிப்., 4ல்) கோவிலுக்கு வந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.