செவியைச் சிறப்பித்துப் பெரியோர்கள் சொல்வதன் நோக்கம்... கடவுளின் நாமங்களைக் கேட்பது செவியே. பரகதி செய்வோருக்குத் துணை செய்து, நல்வழிப்படுத்துவதும் செவியேயாகும். தமிழ் வேதமாகிய தேவாரம் தொடங்கும்போது இச்செவியினையே முதற்கூறுவதாகி, ‘தோடுடைய செவியன் ’ என்று உபதேசிக்கின்றது. ஓங்கார வடிவாக விளங்குவதும் செவியே. முதன் முதலில் செவிக்கே ஆபரணஞ் சூட்டி ‘கர்ண பூஷணம்’ என்கிற வைதீகச் சடங்கைச் செய்கின்றனர்.