ராகவேந்திரர் தியானம் செய்து நேரில் தரிசனம் கண்ட ஆஞ்சநேயரின் ‘பஞ்சமுகி குகைக்கோயில்’ மந்திராலயத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் ஓர் அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு ராகவேந்திரர்க்கு ஆஞ்சநேயர் ஐந்து முகங்களுடன் காட்சியளித்தாராம். உயரமான படிகள் கொண்டது. இரவு நேரங்களில் ஆஞ்சநேயர் இரவுக் காவலராக கிராமத்தை வலம் வந்து காவல் காப்பதாக ஐதிகம். அதற்காக அவருக்குப் மிகப் பெரிய காலணிகள் செய்து வைக்கப்படுகின்றன. நாளடைவில் இக்காலணிகள் தேய்ந்து போவதாகவும், புது ஜோடி காலணிகள் மாற்றப்படுவதாகவும் ஊர் மக்கள் சொல்கிறார்கள். இம்மலைக்கோயிலில் போக்குவரத்து வசதிகள் நிறைய இருப்பதால் மந்திராலயத்துக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கிறார்கள்.