நவக்கிரகங்களில், கேது பகவானின் அதிதேவதையாகத் திகழ்பவர் சித்திரகுப்தர். கேது தோஷம் உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சித்திரகுப்தன் வீற்றிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுவதுடன், சிறப்பு பூஜை செய்வது நல்ல பலனைத் தரும். பிறந்த கிழமை, நட்சத்திரம் கூடும் நல்ல நாளில் வழிபாடு செய்வது மேலும் சிறப்பை அளிக்கும். வழிபாட்டின்போது நீல நீற மலர்கள், பல வண்ண ஆடைகள் கொண்டு சித்திரகுப்தனை வழிபடுங்கள்.