இறைவனை நினைத்து பக்தர்களே விரதம் இருப்பார். ஆனால், சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று தொடங்கி, பங்குனி கடைசி ஞாயிறு அன்று வரை பக்தர்களுக்காக பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். இந்நாட்களில் அம்மனுக்கு ஒரு வேளை மட்டுமே இளநீர், பானகம், துள்ளுமாவு நிவேதனம் செய்யப்படுகிறது.