ஆஞ்சநேயரை நான்கு வகையாக சிலை வடிப்பதுண்டு. இருகரங்களையும் இணைத்து கூப்பி தலைமேல் வைத்து வணங்கும் நிலையில் உள்ளவர் பக்த அனுமன். கூப்பிய கையை மார்புக்கு நேராக வைத்திருந்தால் அபய ஹஸ்த அனுமன். ஒரு கையில் கதையும் மற்றொரு கையில் சஞ்சீவி மலையும் கொண்டிருந்தால் ‘வீர அனுமன், ராமனை தன் தோள் மேல் சுமந்தபடி ஐந்து முகங்கள் கொண்டிருந்தால் பஞ்சமுக ஆஞ்சநேயர், 10 கைகளுடன் விளங்கும் ஆஞ்சநேயர் தசபுஜ ஆஞ்சநேயர்.