தெய்வ வழிபாட்டுக்காக திருக்கோயிலுக்குச் செல்லும்பொழுது அங்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். அகல் விளக்கு எனப்படும் சிட்டி விளக்கில் நெய் ஊற்றித் தீபம் ஏற்றினால் ஞானம் ஏற்படும். நல்லெண்ணெய் தீப விளக்கு ஏற்றினால் ஆயுள் அதிகரிக்கும். இலுப்பெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் சீராகும். விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால் எல்லா யோங்களும் வந்து சேரும்.