திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் தேவாசிரியன் மண்டபம் எனும் பெரிய மண்டபம் உள்ளது. இதனை ஆயிரங்கால் மண்டபம் என்றும் அழைப்பர். தேவர்கள் இங்கு ஒன்று கூடி சிவபெருமானை வழிபட்டு வந்தனராம். சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் இம்மண்டபம் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.