பதிவு செய்த நாள்
07
பிப்
2019
11:02
பழநி: மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலில் திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பழநி முருகன் கோயில் உபகோயிலான, கிழக்குரதவீதி மாரியம்மன் கோயிலில் பிப்.,1 முதல் முதல் 21 வரை மாசித்திருவிழா நடக்கிறது. விழாவில் நேற்றுமுன்தினம் இரவு திருக்கம்பம் தயார் செய்து, அதனை அலங்கரித்து நேற்று காலை 6:00மணிக்கு பூஜைக்குபின்னர், கோயில் முன்பகுதியில் நடப்பட்டது. கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.,19ல் திருக்கல்யாணமும், அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது. பிப்.,20ல் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,12முதல் 21 வரை தினசரி தங்கக்குதிரை, வெள்ளியானை வாகனங்களில் அம்மன் திருவுலா நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ)செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் செய்கின்றனர்.