பதிவு செய்த நாள்
07
பிப்
2019
11:02
செய்யாறு: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில், ரதசப்தமி பிரமோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், திருவோத்துாரில் உள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்தர் ஆண் பனையை, பெண் பனை மரமாக மாற்றி, குலை ஈன்ற செய்தார். மேலும், அருணகிரிநாதர், வள்ளலார், சிவப்பிரகாசர் போன்றோர், பாடல் பெற்ற தலமான, இக்கோவிலில், நேற்று, ரதசப்தமி பிரமோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, நேற்று காலை, கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. கொடி மரம் முன், உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். காலை, 5:00 மணிக்கு, தனுசு லக்னத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, கேடய உற்சவம், கற்பக விருட்சம் காமதேனு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து, வரும், 11ல், திருக்கல்யாண உற்சவம், 12ல், தேரோட்டம் நடக்கிறது. வரும், 15ல், கொடி இறக்குதலுடன் விழா முடிகிறது.