பதிவு செய்த நாள்
07
பிப்
2019
12:02
சூலுார்:சூலுார் மேற்கு மாகாளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, அம்மன் திருவீதி உலாநடந்தது. சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள, மேற்கு மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 22ம் தேதி இரவு, 10:00 மணிக்கு சுவாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 29ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.நேற்று முன்தினம் சீர் தட்டு கொண்டு வருதல், அம்மன் அழைத்தல் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து, அம்மன் அழைக்கும் பூஜை துவங்கியது. பெண்கள் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.முக்கிய வீதிகள் வழியாக சென்று, பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த அபிஷேக, அலங்கார பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 9ம் தேதி ஊர் அபிஷேகம் மற்றும் மகா முனி பூஜை நடக்கிறது.