Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எழுதிய மரத்தையன் கோவிலில் ... செம்பை சங்கீத உற்ஸவம் பிப்.14ல் துவக்கம் செம்பை சங்கீத உற்ஸவம் பிப்.14ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் 11 தங்க கருடசேவை: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருநாங்கூரில் 11 தங்க கருடசேவை: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 பிப்
2019
02:02

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேசங்கள் நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள், அரிமேய வின்னகரம் ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீ மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்ய தேச கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் பிரசித்தி பெற்ற 11 கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம்.

இவ்வாண்டு கருட சேவை உத்ஸவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கருட சேவையை முன்னிட்டு திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருட சேவை க்கு வருமாறு பெருமாள்களை அழைப்பார்.  அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும் தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு மணிமாடக் கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் நடை பெற்றது. இரவு 12:30 மணிக்கு மணிமாட கோயில் ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடை பெற்று, கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு சிறப்பு மிக்க தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது.


அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடினர். தொடர்ந்து இரவு 1:30 மணிக்கு 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் நாகை கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி. வி ஜயக்குமார் உள்ளிட்ட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 11 பெருமாளையும் ஒரே இடத்தில் கண்டு சே வித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் நான்கு மாடவீதிகளையும் வலம்வந்து அதிகாலை மீண்டும் மணிமாடக்கோயிலில் எழுந்தருளினர். உத்ஸவத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி. சாமிநாதன் தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மயிலாடுதுறை, சீர்காழியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar