பதிவு செய்த நாள்
07
பிப்
2019
01:02
அந்தியூர்: அந்தியூரை அடுத்த ஆலம்பாளையம் எழுதிய மரத்தையன் கோவில் தேர்த் திருவிழா கடந்த, 15 நாட்களுக்கு முன், கொடியேற்றத்துடன் துவங்கியது. பண்டிகையின் முக்கிய நிகழ்வான, பெருந்தேர் திருவிழா நேற்று நடந்தது. எழுதிய மரத்தையன் சுவாமி, பெருமாள் சுவாமிகள், 60 அடி தேரிலும், காமாட்சி அம்மன் சுவாமி பல்லக்கிலும் மடப்பள்ளியிலிருந்து, கோவில் வனத்துக்கு, பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர். கோவிலை வந்தடைந்ததும், பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். திருவிழாவில், அந்தியூர் சுற்று வட்டாரத்திலிருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற, 9ல், பால்பூஜையுடன் கோவில் பண்டிகை நிறைவடைகிறது. நாளை, மீண்டும் சுவாமி தேர்கள் கோவில் மடப்பள்ளியை வந்தடையும். திருவிழா ஏற்பாடுகளை, எழுதிய மரத்தையன் கோவில் பரம்பரை பூசாரி வகையறாக்கள், ஏற்பாடுகளை செய்திருந்தனர்.