பதிவு செய்த நாள்
08
பிப்
2019
12:02
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, செல்வமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்று காலை, 5:00 மணி முதல், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், காலை, 9:00 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது. மாலை, முளைப்பாலிகை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வருதல், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட யாக வேள்விகள் நடைபெற்றன. இன்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை, 5:00 மணிக்கு குபேர லட்சுமி பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, நடக்கிறது. வரும், 10 காலை, 9:00 மணிக்கு மேல், செல்வ விநாயகர், செல்வ மாரியம்மன், செல்வசுப்ரமணியர் சுவாமி மூலஸ்தான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், கருப்பண்ண சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.