பதிவு செய்த நாள்
08
பிப்
2019
12:02
தர்மபுரி: தர்மபுரி கோட்டையில் உள்ள, வரலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் நடக்கிறது.
இதை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு, எஸ்.வி., சாலை விநாயகர் கோவிலில் இருந்து, கடைவீதி, தேர்நிலையம் வழியாக, யானை, குதிரை, பசுக்களுடன், பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு மேல், சுதர்சனஹோமம், லட்சுமி ஹோமம், தன்வந்தி ஹோமம் நடந்தன. இன்று காலை, 6:00 மணிக்கு, பூர்ணாஹூதி, வாஸ்து, வாஸ்துபலி ஹோமங்கள் நடக்கின்றன. நாளை மறுநாள், காலை, 4:30 மணிக்கு, வேத பாராயணம், கோ-பூஜை, விஸ்வரூப கன்யாபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:30 மணிக்கு, சர்வ தரிசனம், 11:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத, வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.