காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2019 06:02
காரைக்கால்: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை மற்றும் ஏகதின லட்சார்சனை விழா நடந்தது.
காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தினம் காளியம்மனை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய்,வெள்ளி மக்கள் கூட்டம் அதிகாமாக கணப்படும். செவ்வாய்கிழமை இரவு பக்தர்கள் தங்கள் நேற்றிகடனை நிறைவேற்ற இரவு பக்தர்கள் கோவிலில் தங்கி வழிபடுவர்கள் இந்நிலையில் தைகடை வெள்ளியை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை மற்றும் ஏக தின லட்சார்சனை விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெண்கள் தங்களுடைய குடும்பம் நன்மையாக இருக்க வேண்டும் என்று 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜைகளில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பாக செய்திருந்தனர்.