வருஷநாடு: கடமலைக்குண்டு அருகே டாணா தோட்டம் மலையடிவாரத்தில் இயற்கை எழில்மிகுந்த பகுதியில் அய்யனார் கோயில் உள்ளது.
பழமை வாய்ந்த, பிரசித்த பெற்ற இக்கோயிலில் காவல் காக்கும் அய்யனாரை மனமுருகி வேண்டினால் நினைப்பது நடக்கிறது. எதிலும் வெற்றி கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தைப்பேறு, மன குழுப்பத்தை நீக்கி அமைதி தருகிறார்.
வெள்ளிக்கிழமை தோறும் வழக்கமான பூஜைகளும், திருகார்த்திகை, சித்திரை, மார்கழி மாத பூஜைகள் என ஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கும். நேர்த்திக்கடன் நிறைவேற்றப் பட்ட பின்னர் அய்யானருக்கு கிடா வெட்டி, அன்னதானம் வழங்குகின்றனர்.
வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேனி, மதுரை உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு செல்வோர் சுவாமியை வழிபட்ட பின்னர் தான் செல்வர். புதிய வாகனத்திற்கு இங்கு பூஜை செய்து இயக்குகின்றனர்.