பதிவு செய்த நாள்
09
பிப்
2019
03:02
உடுமலை:உடுமலை, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (பிப்., 10ல்), நடக்கிறது.உடுமலை, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று (பிப்., 8ல்)துவங்கியது.
இன்று (பிப்., 9ல்), காலை, 8:00 மணிக்கு, கோ பூஜை, கஜ பூஜை மற்றும் அஸ்வ பூஜை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு சுமங்கலி பெண்கள், குங்கும அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, (பிப்., 10ல்)அதிகாலை, கலச அர்ச்சனை மற்றும் ஹோமம் நடக்கிறது.
காலை, 9:00 மணிக்கு, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், நவக்கிரஹ சுவாமிகள் கொண்ட மூன்று நிலை ராஜகோபுரம் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் விமான கோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலையில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.
மடத்துக்குளம்மடத்துக்குளம் ஒன்றியம், கணியூர் அருகே அரிய நாச்சிபாளையத்தில் உள்ள சிலம்பாயம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று (பிப்., 9ல்) காலை அமராவதி ஆற்றுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து வருதலுடன் தொடங்குகிறது.
மாலை 6:00 மணிக்கு, மங்கள இசை, கணபதி பூஜை, முதற்காலயாக பூஜை நடக்கிறது. நாளை (பிப்., 10ல்) காலை, 7:00 மணிக்கு, மங்கள இசை, மண்டப அர்ச்சனை, கணபதி யாகம், 8:30 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் விநாயகர், சிவகாமியம்மன், முருகர், சிலம்பாயம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் இடம் பெறுகிறது.