பதிவு செய்த நாள்
11
பிப்
2019
02:02
கூடலூர்:கூடலூர், சளிவயல் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.கூடலூர், சளிவயல் சக்தி விநாயகர் கோவில், பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் திருவிழா, 8ம் தேதி, அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 6:30 மணிக்கு
கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 9ம் தேதி காலை 11:00 மணிக்கு தானிமட்டம் அம்மன் ஆற்றங்கரையிலிருந்து புனித நீர், முளைப்பாரி ஊர்வலம் துவங்கி, கோவிலை வந்தடைந்தது. மாலை 5:00 மணிக்கு பூர்வாங்க
பூஜைகள், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கரஷணம், பூமாதேவி பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், மூல மந்திரம் ஹோமம், தீபாரதனை, தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
இரவு 10:00 மணிக்கு புதிய பிம்பங்களுக்கு யந்திரஸ்தானம், அஷ்டபந்தனம், எண்வகை மருந்து சாத்துதல், தங்கம், வெள்ளி, நவரத்தின கல் பீடத்தில் சமர்ப்பித்தல், சாமி, பிரதிஷ்டை ஆகியவை நடந்தன.நேற்று (பிப்., 10ல்), அதிகாலை 4:00 மணிக்கு ஆனைமுகத்தான் வழிபாடு, புண்யாகம், பூர்வாங்க பூஜை, பிம்பசுத்தி தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், தைலாபிஷேகம்,
காயத்ரி ஹோமம் நடந்தது.காலை 7:30 மணிக்கு கலச பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 9:15 மணிக்கு கோவில் கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, ஊர் மக்கள் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.