பதிவு செய்த நாள்
11
பிப்
2019
04:02
புதுச்சேரி: தருமாபுரி திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி, நேற்று (பிப்., 10ல்) யாக சாலை பூஜை நடந்தது.
உழவர்கரை நகராட்சி, தருமாபுரி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று (பிப்., 11ல்) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று (பிப்., 11ல்) காலை 9:00 மணிக்கு மங்கள இசை, புண்யா ஹாசனம், யாகசாலை ஆராதனம், நித்ய ஹோமங்கள், பஞ்ச சூக்த ஹோமம், பூர்ணஹூதி, பலி நிவேதனம், சாற்றுமுறை, தீபாரதனை நடந்தது.
மாலை 4:00 மணிக்கு மங்கள இசை, புண்யாஹவாசனம், யாகசாலை ஆராதனம், மகாசாந்தி ஹோமம், விமான மூலவர் உற்சவம், திருமஞ்சனம், ரக்க்ஷபந்தனம், நித்ய ஹோமம்,
சயனாதிவாசம், சாற்று முறை, தீபாரதனை நடந்தது.இன்று(பிப்., 11ல்) காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம், கோபூஜை, கஜ பூஜை, மூர்த்தி ஹோமம், சதுக்க ஹோமம் நடக்கிறது. 9:30 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத அரி நாராயணப் பெருமாள், திரவுபதியம்மன் மற்றும் பரிவார
மூர்த்திகளுக்கு உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு அர்ஜூனன்-திரவுபதிய ம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்கவாலர் குழுவினர்
செய்துள்ளனர்.