Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞானியின் அர்ப்பணிப்பு நல்லதா நாலு வார்த்தை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
200 போனது 400 கிடைத்தது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
04:02

சீனாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் எரிக் ஹென்றி. அவர் தினமும் காலையில் எழுந்ததும் ஜெபிப்பது, வேதம் (பைபிள்) வாசிப்பது ஆகியவற்றை முடித்த பிறகே, உடற்பயிற்சி செய்ய புறப்படுவார். ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களம் இறங்கி, முதல் பரிசு பெற்றார். பல பதக்கங்களைப் பெற்று தன் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.  இதையடுத்து நடந்த போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்படும் என ஒலிம்பிக் குழுமத்தில் இருந்து அறிவிக்கப்பட்டது. எரிக் ஹென்றி இதில் பங்கேற்று வெற்றி பெறுவார் என நாடே எதிர்பார்த்தது. ஹென்றிக்கும் அந்தப் போட்டியில் பங்கேற்க ஆசை. ஆனால், போட்டி நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை என அறிந்ததும் அவர் குழப்பம்அடைந்தார். ஞாயிறு அன்று அவர் சர்ச்சுக்கு தவறாமல் செல்லும் பழக்கமுடையவர். போட்டியா? ஆலயமா? என மனம் அலை மோதியது. சீனநாட்டின் முக்கிய பிரமுகர்கள், அவரை போட்டியில் பங்கேற்கும்படி உற்சாகப்படுத்தினார்கள். ஆனால், “உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசாரிப்பாயாக,” என்ற பைபிள் வசனம் அவரைச் சிந்திக்க வைத்தது.

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பெருமை அடைவதைவிட, ஆலயத்தில் தேவனை ஆராதிப்பதையே பெருமையாகக் கருதி, ஆலயத்திற்குச் சென்றார். போட்டியில் பங்கேற்காததால், பலரும் இவரை ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்று வசை பாடினார்கள். ஹென்றியோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை. சில ஆண்டுகளுக்கு பின்னர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டது. ஹென்றி இந்தப் போட்டியில் பங்கேற்க பெயர் பதிவு செய்தார். தேர்வாளர்களோ, “100 மீட்டருக்கு பிறகு, 200, 300 ஓடியிருந்தால் தான், 400க்குள் நுழைந்து வெற்றி பெற முடியும். எனவே, நீங்கள் இதில் வெற்றி பெற வாய்ப்பில்லை. இருப்பினும், உங்கள் ஆர்வம் காரணமாக பெயரைப் பதிவு செய்து கொள்கிறோம்,” என சொல்லிவிட்டனர். அவர் வெற்றி பெற மாட்டார் என்றே எல்லாரும் நினைத்தனர். ஆனால், அவரே முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். எல்லாரும் அதிசயித்துவிட்டனர். ஒரு நிருபர் அவரிடம், “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்று கேட்டார். “கடந்த போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு அழைத்தனர். அன்று தேவனின் ஆராதனையே உயர்வென்று நினைத்துச் சென்றேன். அந்த ஆராதனையின் பயனால் 400 மீட்டரில் வென்றேன்,” என்றார். நாம் ஒவ்வொருவரும் ஞாயிறு ஆராதனையை முக்கியத்துவப்படுத்துவோம். வாழ்வில் முன்னேறுவோம். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar