Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

200 போனது 400 கிடைத்தது! கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதா நாலு வார்த்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
16:23

“அனப்யாசே விஷம் வித்யா, அஜீர்ணம் போஜனம் விஷம் ந விஷம், சபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம் நந”  என்பது, வாழ்க்கைக்கு
பயன்படக்கூடிய ஒரு ஸ்லோகம். வியாசமுனிவர் பதினெட்டு புராணங்களில் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். மற்றவர்களுக்கு நாம்
பரோபகாரம் (நன்மை) செய்தால் நமக்கு புண்ணியம் சேருகிறது என்பது அவரது அறிவுரை. பரோபகாரம் செய்ய எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. படித்த நாமே, நடைமுறையில் பரோபகாரம் செய்யாமல் இருந்தால், படித்த படிப்பு வீணாகி விடுகிறது.... சில நாட்களில், நாம்
படித்ததையே மறந்து விடுகிறோம். பிறகெப்படி நம்மால் உதவ முடியும்?  சரி... இனி, மேற்கண்ட ஸ்லோகம், நமக்கு உணர்த்தும் அறிவுரையைப் பார்ப்போம். நமக்கு சக்தி கொடுக்கும் உணவே, சில சமயங்களில், நமக்கு எதிரியாக மாறுகிறது. நம்மால் ஒன்றும் சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. அப்பொழுது ‘லங்கணம் பரம ஔஷதம்’ என்று சொல்லுவார்களே! அதன்படி, மேற்கொண்டு உணவு அருந்தாமல், வெறும் நீரோ அல்லது எளிமையான உணவு உட்கொள்வதோ, நம் வயிற்றிற்கும், உடலுக்கும் நல்லது. மேலும் மேலும் உணவு அருந்தினால், அது நமக்கு
எதிரியாக அல்லது விஷமாகி விடுகிறது. அதுபோல, ஒருவன், தன்னுடைய நேரத்தையும் பணத்தையும், ஆடம்பரமான கூட்டங்களில், வெறும்
பெயருக்காக செலவழிப்பது விரும்பத்தக்க விஷயமில்லை. ‘விரலுக்கு தகுந்த வீக்கம்’ என பெரியோர்கள் சொல்லுவார்களே! அதை ஞாபகத்தில் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல! விஷயமே தெரியாத ஒருவன், ஒரு விவாதத்தில் ஈடுபடுவதும்
நல்லதில்லை. ஒரு வயோதிகர் தன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், இளம் கன்னியை மனைவியாக மணம் புரிவது நன்மையில் முடியாது. அதுபோல், ஒரு இளம் கன்னி, வயோதிக கணவனுக்கு துன்பத்தை தருவது தவிர்க்க முடியாத விவகாரம்.  நம்முடைய குறைபாடுகளை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்பாகவே எடுப்பது உசிதம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
முடியாது’ என்ற வார்த்தை அகராதியில் இருக்கக்கூடாது தான். அதற்காக, மரம் வெட்ட படித்தவன், ரசாயனப்பொருள் ... மேலும்
 
பழமையான ரிக்வேதம் அக்னியை  ‘ஒளி கடவுளாக’ போற்றுகிறது. அக்னியில் மூன்றுவிதம் உண்டு. அவை புவிஅக்னி, ... மேலும்
 
ஷேர்ஷாஹ் சூரி என்ற மன்னர் இந்தியாவை ஆட்சி செய்த நேரம். அவரது மகன், ஒரு பெண்ணின் மீது வெற்றிலை பீடாவை ... மேலும்
 
அகத்திக்கீரையில் அமிர்தத்தின் துளி இருப்பதாகச் சொல்வர். அதனைப் பசுவுக்கு கொடுப்பதற்கு ‘கோக்ராஸம்’ ... மேலும்
 
நமக்கு மேலான ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வைப் பெறுவதே பிறவிப்பயன் என்கிறார்கள் ஞானிகள். அதற்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.