பதிவு செய்த நாள்
12
பிப்
2019
04:02
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளத்தில் கன்னித் திருவிழா நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம் சப்த கன்னிகள் கோவிலில், விவசாயம்
தழைக்கவும், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் வேண்டி, ஆண்டுதோறும் தைமாதம் கன்னித் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்தாண்டு விழாகடந்த மாதம் 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.தொடர்ந்து தினமும் இரவு, சப்த கன்னிகள் மற்றும் காவல் தெய்வங்களான சாட்டைக்காரன், அக்னி ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
சிறப்பு விழாவான கன்னித் திருவிழா நேற்று (பிப்., 11ல்) நடந்தது. விழாவையொட்டி, கன்னிகள் மற்றும் காவல் தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, பம்பை, உடுக்கை
வர்ணிப்புடன், அன்னப்பன்பேட்டை கடற்கரையில் கன்னித் திருவிழா நடந்தது.