பதிவு செய்த நாள்
13
பிப்
2019
01:02
கோவை:எல்.ஐ.சி.,காலனி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.பொள்ளாச்சி ரோடு, சிட்கோ, எல்.ஐ.சி., கானியில் அமைந்துள்ளது, சித்தி விநாயகர் கோவில். கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடந்தது. வளாகத்தில், ஆதி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சிவன், அம்பாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள், தட்சிணாமூர்த்தி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், கால பைரவர், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.