பதிவு செய்த நாள்
13
பிப்
2019
01:02
நெகமம்:நெகமம் பேரூராட்சியில், பழமையான ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேக விழா துவங்கியது.கடந்த, 8ம் தேதி கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி மற்றும் நவக்கிரக ஹோமங்கள் நடந்தன.
தொடர்ந்து, யாக கால பூஜைகள் நடந்தன. 10ம்தேதி காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோவில் ஜெகநாதர் குழுவினர் வேத முறைப்படி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.அதனை தொடர்ந்து, வேதபாராயணம் சாற்று முறை தசதரிசனமும், மகா தீபாராதணையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது.