சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 03:02
சின்னசேலம்: சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நேற்று (பிப்., 13ல்) நடந்தது.அதனையொட்டி, கோவிலில் உள்ள அஷ்டபுஜ துர்க்கை சமேத ராகு, கேது நாகவள்ளி நாககன்னி சுவாமி முன் காலை 11:30 மணி முதல் பகல் 3:00 மணி வரை ஒமா பூஜையும், அபிஷேக, அலங்காரமும், வெள்ளி கிரீடம் அமைத்து ஒன்னரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.