Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழா : ... உலக நலனுக்காக பழநியில் லட்சார்ச்சனை, ருத்ரயாகம் உலக நலனுக்காக பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2019
12:02

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆறாம் நாள் உற்சவத்தில், விபச்சித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினசரி காலையில், ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரித்த வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். முக்கிய நிகழ்வாக, ஆறாம் நாள் உற்சவத்தையொட்டி, நேற்று, விபச்சித்து முனிவருக்கு பெரியநாயகர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 11:00 மணிக்கு மேல் நுாற்றுக்கால் மண்டபத்தில் புஷ்ப மஞ்சத்தில் மூஷிகம், மயில், ரிஷப வெள்ளி வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.


12:40 மணிக்கு மேல், சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.நண்பகல் 1:00 மணியளவில் பஞ்சமூர்த்திகள் கோவில் பிரகார வீதியுலா வந்ததும், கிழக்கு கோபுர வாயிலில், மலர்கள் துாவியபடி, கயிலை வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, பழமலைநாதா, திருமுதுகுன்றீஸ்வரா என கோஷமிட, பெரியநாயகர் சுவாமி, விபச்சித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. வரும் 18ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 19ம் தேதி மாசிமகம், 20ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar