ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அடுத்த, சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்ப சுவாமி கோவில் திருவிழா, இன்று 16 ல், காலை, 7:00 மணிக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மதியம், 2:00 மணியளவில் முத்துக்கருப்பணார் பூஜை, இரவு, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 9:00 மணிக்கு கிடா வெட்டுதல், 10:00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.