’ஜகாத்’ எனப்படும் தானம் முக்கியமானது. “ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளில் இருந்து தானம் செய்யாத பட்சத்தில் அது அசலையே அழித்து விடும்” என்கிறார் நபிகள் நாயகம். பெரும் முதலீட்டில் தொழில் செய்பவர்கள் லாபம் சம்பாதிக்கும் போது தானத்திற்குரிய பணத்தை தனியாக ஒதுக்கி ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். “ஒருவனுக்கு இறைவன் வசதி அளித்திருந்தும், அவன் அதற்குரிய ஜகாத்தை கொடுக்காவிட்டால், அப்பொருள் மறுமைநாளில் கொடிய நச்சுத்தன்மை உடைய பாம்பாக மாறும். அதன் தலையில் இரு கரும்புள்ளிகள் காணப்படும். அப்பாம்பு கழுத்தில் வளையமாக சுற்றிக்கொண்டு ’நான் தான் உன்னுடைய பொருள்’ என்று சொல்லும்” என்கிறார் நாயகம். இத்தண்டனையில் இருந்து தப்பிக்க தானம் செய்வதே வழி.