கடலூர்: மாசி மகத்தையொட்டி, கடலூர் முதுநகரில் நடந்த தெப்ப உற்சவத்தில் அலங்கரிக்கப் பட்ட படகுகளில் சுவாமிகள், அருள்பாலித்தனர்.மாசிமத்தையொட்டி கடலூர் முதுநகர் துறைமுகத்தில் படகுகள் மின் விளக்குகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சோனங்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள் சுவாமி, சிங்காரத்தோப்பு வெள்ளரியம்மன், அக்கரை கோரி கண்ணூர் மாரியம்மன், சலங்கைகாரத் தெரு நாகமுத்து மாரியம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அதே போல் முதுநகர் அடுத்த தைக்கால் தோணித்துறையில் நடந்த உற்சவத்தில் கருப்பு முத்துமாரியமன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட படகில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.